உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மூலம் மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்

2 Min Read

சென்னை, ஜூன் 13- சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாணவர்களுக்கு உதவிகள்

தமிழ்நாட்டில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை கூட்டு முயற்சியுடன் ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டது. உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப் படும் மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோர்கள் விருப்பமின் மையால் மற்றும் சமூக காரணங்களால் உயர் கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள்,  சான்றிதழ்கள் தேவைப் படும் மாணவர்கள், திருமணம் போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர இயலாத மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல் லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.

மாவட்ட கட்டுப் பாட்டு அறை 7ஆவது தளத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு வேலை நாட் களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும். மாவட்ட கட்டுப்பாட்டு அறை யின் வழியாக ஆலோசனை தேவைப் படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப் படும். 11 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக், அய்டிஅய் போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர் கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் அய்டிஅய் கல்லூரிகளின் காலிப் பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் என, அனைத்து தகவல்களும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப் படும். மேலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 6381560194 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *