சென்னை, ஜூன் 13- வனக்காவலர், வனப்பாதுகாவலர், வனப்பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான உடல்திறன் தகுதித் தேர்வு ஜூன் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் மருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது:
ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் இடம் பெற்றுள்ள வனக்காவலர், வனப் பாதுகாவலர் மற்றும் ஒருங்கிணைந்த குரூப்-3 தேர்வில் அடங்கிய வனப் பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கான உடல்திறன் தகுதித் தேர்வு ஜூன் 15, 16ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அழைப்பாணையை தேர்வாணை யத்தின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட தேதி மற்றும் இடத்தில் நடைபெறும் உடல்திறன் தகுதித் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
