எனக்கு மரண பயம் கிடையாது “சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்” – ஷேக் ஹசீனா

1 Min Read

புதுடில்லி, ஜூன் 29- சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால், பிரதமர் பதவியிலிருந்து விலகி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

மரண தண்டனை

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வங்கதேசத்தின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனா வுக்கு மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதுகுறித்து ஷேக் ஹசீனா தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு அநீதியானது. இது சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு எதிரான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.

எங்களுடைய அவாமி லீக் கட்சியைத் தலைவர் அற்றதாக மாற்றுவதற்காக, அரசியல் பழிவாங்கலின் கருவியாக நீதித்துறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. அவை அப்போதும் தோல்வி யடைந்தன, இப்போதும் தோல்வியடையும்.

தாய்நாட்டுக்குத் திரும்புவேன்

எனக்கு மரண பயம் கிடையாது. 1975இல் எனது பெற்றோர், சகோதரர்கள் என ஒட்டுமொத்த குடும் பத்தையும் இழந்தேன்.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கூட, கையெறி குண்டு தாக்குதல் மூலம் என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. எனக்கு எதிராகப் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஆனால், அத்தனை சதிவலைகளையும் உடைத்து நான் வங்கதேச மக்களின் பக்கம் நின்றேன்.

மக்களின் வாக்குகள் மூலம் 5 முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தேன். எனது ஒட்டுமொத்த வாழ்க்கை யும் வங்கதேச மக்களோ டும், அவாமி லீக் கட்சி யோடும், ஜனநாயகப் போராட்டத்தோடும் பிணைந்துள்ளது.

எனவே, நான் தெளிவாகக் கூறுகிறேன்: அனைத்து தடைகளையும் சதிகளையும் முறியடித்து, இந்த ஆண்டே நான் என் தாய்நாட்டுக்குத் திரும்புவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *