புதுடில்லி, ஜூன் 12 தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் தீ விபத்துகளுக்கு மத்தியில், டில்லி தீயணைப்புத் துறை (DFS) கடுமையான ஊழியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் பழைய உபகரணங்கள் காரணமாக பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் மாளவியா நகர்ப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, இந்தத் துறையின் தற்போதைய அவல நிலையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள் ளது.

அருகிலிருந்தும் வர முடியாத அவலம்
கடந்த ஜூன் 3 ஆம் தேதி மாள வியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளி நாட்டினர் உட்பட 20 க்கும் மேற் பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த னர். தீ விபத்து ஏற்பட்ட இடத்திலி ருந்து வெறும் 500 மீட்டர் தொலை வில், அதாவது 10 நிமிட நடை தூரத்தில் ‘கீதாஞ்சலி தீயணைப்பு நிலையம்’ உள்ளது. ஆனால், விபத்து நடந்த நேரத்தில் அங்கி ருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவில்லை. காரணம், அங்குள்ள ஊழியர் கள் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜான்பூரில் குப்பைக் கிடங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக மாளவி யா நகர் தீ விபத்து அழைப்பிற்கு உடனடியாக பதிலளிக்க முடிய வில்லை என அங்கிருந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார். இதனால், 7-8 கி.மீ தொலை வில் உள்ள பிகாஜி காமா பிளேஸ் மற்றும் நேரு பிளேஸ் நிலை யங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. குறுகலான பாதைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவை வந்து சேர தாமதமானதால், பொது மக்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டியதாயிற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான ஊழியர் பற்றாக்குறை; அதிக பணி நேரம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) 2026 ஆம் ஆண்டு தரவுகளின்படி, டில்லி தீயணைப்புத் துறையில் அனுமதிக்கப்பட்ட 3,633 பணியிடங்களில் நிர்வாகப் பதவிகள் உட்பட 1,001 பணியி டங்கள் காலியாக விடப்பட்டுள் ளன. தலைமையகம் மற்றும் பயிற்சி மய்யங்கள் என 71 தீய ணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் 4 நிலையங்கள் பகல் நேரத் தில் மட்டுமே இயங்குகின்றன. தீயணைப்பு நிலையங்களின் முதுகெலும்பாகக் கருதப்படும் ‘ஸ்டேஷன் ஆபீசர்’ (Station Offi cer) பதவிகள் 90 இடங்கள் உள்ள நிலையில், தற்போது 29 இடங் கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதிலும் 4 பேர் அடுத்த 3 மாதங்க ளில் ஓய்வு பெறவுள்ளனர். இத னால் பல நிலையங்கள் சாதாரண தீயணைப்பு வீரர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. ஒரு தீயணைப்பு காவல் நிலைய அதிகாரி தொ டர்ந்து 72 மணி நேர ஷிப்ட் (3 நாட்கள்) பணியாற்ற வேண்டியுள்ளது. மற்ற தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேர சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்த அதீத பணிச்சுமையைக் குறைத்து, 8 மணி நேர கால (ஷிப்ட்) முறையைக் கொண்டு வர 6,600 கூடுதல் பணி யாளர்கள் உட்பட மொத்தம் 9,123 புதிய பணியிடங்களை உரு வாக்கத் துறை சார்பில் அரசுக்குக் கடந்த டிசம்பரில் பரிந்துரை அனுப் பப்பட்டுள்ளது. ஆனால் பாஜக அரசு அதற்கு உடனடியாக ஒப்பு தல் தராமல் காலம் தாழ்த்தி மக்களின் உயிரை அலட்சியப் படுத்தி வருகிறது.
உள்கட்டமைப்பு சவால்கள்
டில்லியில் உள்ள மக்கள் தொகை பரப்பளவு உள்ளிட்ட கார ணங்களின் அடிப்படையில் 120 தீயணைப்பு நிலையங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், தற்போது 71 மட்டுமே உள்ளன. சில தீயணைப்பு நிலையங்க ளின் வெளியே இருந்த சாலைத் தடுப்பு இடைவெளி மூடப் பட்டுவிட்டதால், அவசர காலங்க ளில் தீயணைப்பு வாகனங்கள் நீண்ட தூரம் சென்று ‘யு-டர்ன்’ எடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அவசர காலங்க ளில் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் இது பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. பாஜக ஆட்சியில் எல்லா துறைகளிலும் அனைத்து வகையி லும் மக்களின் உயிருக்கு உத்தர வாதம் இல்லை என்ற சூழல் உரு வாக்கப்பட்டு விட்டது. தலைநகர் டில்லியிலேயே மிக மோசமான நிலைதான் உள்ளது. என்றால் நாட்டின் பிற நகரங்களின் நிலை எப்படி இருக்கும் என கடுமை யான விமர்சனங்கள் எழுந்துள் ளன. இந்நிலையில் தீயணைப்பு காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும், கட்டடப் பாதுகாப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும், சட்ட விதிகளின்படி தீயணைப்புத் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
