புதுக்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆவது பிறந்த நாள்விழா பொதுக் கூட்டம்

புதுக்கோட்டை. ஜூன் 12- புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர மூ.சேகர், மாநில ப.க.அமைப்பாளர் அ.சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகரத் தலைவர் செ.அ.தர்மசேகர், திருமயம் ஒன்றிய கழகத் தலைவர் அ.தமிழரசன், ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர் சித்திரைவேல், ம.மு.கண்ணன், மாவட்ட ப.க. தலைவர் இரா.மலர்மன்னன், பெரியார் பிஞ்சுகள் இரா.ச.செம்மொழி, இரா.ச.புரட்சியாளன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர் களாக கழகப் பேச்சா ளர்கள் சில்லத்தூர் சிற்றரசு, நாகை மு.இள மாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்கள்.

இளமாறன் பேசுகை யில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு 103ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம், கலைஞர் வாழ்க என்று சொல்கிறோம் என்றால் தமிழ்நாடு வாழ்க என்று சொல்கிறோம் என்று பொருளாகும். தமிழ்நாடு வாழ்கிறது என்றால் ஆரியம் வீழ்ச்சியடைத்து விட்டது என்று பொருள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் இப்போதும் தவெகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்கிறார். அவருக்குப் புரியாமல் பேசுகிறார். இப்போதும் திராவிடத்திற்கும் ஆரியத் திற்கும்தான் போட்டி.

தமிழ்நாட்டில் இப்போது ஆளும் கட்சியினரும் தந்தை பெரியாரைத்தான் கொண்டாடுவதாகச் சொல்கிறார்கள். எதிர்க் கட்சியாக இருக்கும் திமுகவும் பெரியாரைத்தான் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் பார்த்தாலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கொண்டாடும் ஒரே தலைவர் தந்தை பெரியார் தான். அந்த வகையிலும் நமக்கு இருக்கும் எதிரி ஆரியம்தான் என்று உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *