தஞ்சையில் தாய்க்கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்த நாள்!

தஞ்சை, ஜூன் 12- திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆண்டு பிறந்த நாள் மிக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் முத்தமிழறிஞர்  கலைஞரின் 103 ஆவது பிறந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர கழகத்  துணைத்தலைவர் அ.டேவிட் வரவேற்பு ரையாற்றினார் கழக மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார் தலைமையேற்று உரையாற்றினார்.

தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர் இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம். தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதித் தலைவர் சாமி. கலைச்செல்வன், கரந்தை பகுதித் தலைவர் வெ.விஜயன்,கீழவாசல் பகுதிச் செயலாளர் பழக்கடை பெ.கணேசன் ஆகியோர் முன்னிலையேற்று சிறப்பித் தனர்,

நிகழ்ழ்சியின் துவக்கத்தில் கழகப் பாடல்களை மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநகர இளை ஞரணி துணைத் தலைவர் அ. பெரியார் செல்வம் ஆகியோர் பாடினர்

தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர்  சி.அமர்சிங், மாவட்ட கழகச் செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்,  மாநில மாணவர் கழகத் துணைச்செயலாளர் தே.நர்மதா கலந்து கொண்டு  முத்தழிறிஞர் கலை ஞரின் ஆட்சியில் செய்த சாதனைகள், தந்தை பெரியாரின்  கொள்கைகள்  அனைவருக்கும் அனைத்தும்  கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதனை சட்டமாக்கி, மேலும் நடைமுறைபடுத்தி  மக்களுக்கு பயனுள்ள அனைத்து  திட்டங்களும்  சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு  சென்று சேர்ந்ததா?  என்பதையும் ஆய்வு செய்து மனமகிழ்ச்சியோடு வாழ்ந்த  தலைவர் கலைஞர் என்று  பாராட்டி  மக்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் சாமிநாதன் அவர்களுக்கு 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தின் சார்பாக மேனாள் சட்டமன்ற உறுப் பினர் டி.கே.ஜி நீலமேகம் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்புகளை எடுத்து கூறி உரையாற்றினார் தஞ்சை மாநகரச் செயலாளர் சண்.இராமநாதன், ஆகியோர் உரையாற்றினர்,

தஞ்சை 14 ஆவது வார்டு தி.மு.க. செயலாளர்  என். சண்முகநாதன், தலைமைக் கழக தி.மு.க. பேச்சாளர்கள் தஞ்சை.காமராஜ், வரகூர் காமராஜ் உள்ளிட்ட தி.மு.க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க. ஊடகப்பிரிவுத்தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைச்செயலாளர் முனைவர் ந. எழிலரசன், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், பெரியார் சமூகப் காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாவட்ட துணைச்செயலாளர் ரெ.சுப்ரமணியன், மாவட்ட மகளிரணித்தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் தெ. மலர்க்கொடி, மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.பிரகாஷ், மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி, தஞ்சை ஒன்றிய ப.க.தலைவர் சோ.இராமகிருட்டிணன், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், தஞ்சை மாநகர  விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என். குணசேகரன், மாநகர பகுத்தறிவு கலை இலக்கியணி அமைப்பாளர் கவிஞர்.பகுத்தறிவு தாசன், தஞ்சை ஒன்றிய ப.க.செயலாளர் மா.லெட்சுமணசாமி, மாநகர விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் விஸ்வநாதன், மேனாள் மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வெ.துரை நன்றி கூறிட நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *