சத்துவாச்சாரியில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் – திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்

1 Min Read

திராவிடர் கழகம்

வேலூர், ஜூன் 19- தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டலின்படி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சி நாள் – முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சத்து வாச்சாரியில் 09.06.2026 அன்று மாலை 5.30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வேலூர் மாநகரத் தலைவர்  ந.சந்திரசேகரன் தலைமை வகித்தார். வேலூர் மாநகரச் செயலாளர் அ.மொ.வீரமணி வரவேற்புரையாற்றினார். மாவட்டக் காப்பாளர்
வி.சடகோபன் தொடக்க உரையாற்றினார். பகுத்தறி வாளர் கழகம் மாநில அமைப் பாளர் இர.அன்பரசன் நோக்க உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.இ. சிவகுமார், மாவட்ட செயலாளர் இ.தமிழ் தரணி, மேனாள் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், பொதுக் குழு உறுப்பினர்கள் ச.கலைமணி, பெரியார் பெருந்தொண்டர் இரா. கணேசன், உ.விஸ்வ நாதன், மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன், பெரியார் பெருந்தொண்டர் தா.நாகம்மாள், மாநகர மகளிர் அணி வீ.பொன் மொழி, தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் க.சையத் அலிம், காட்பாடி நகரத் தலைவர் பொ.தயாளன், சதுவசாரி வீ.தமிழ்செல்வன், தி.க.சின்னதுரை உள்ளிட்ட கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் க.சிகாமணி நன்றி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *