மேட்டூர் அணையில் இருந்து  டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு இல்லை தி.மு.க. ஆட்சி போல் குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்படுமா?

2 Min Read

மேட்டூர், ஜூன் 12 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் உள்ளதால் டெல்டா பாசனத்திற்கு இன்று (ஜூன் 12) தண்ணீர் திறக்கவாய்ப்பு இல்லை. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு – கருநாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று (11.6.2026) 3வது நாளாக நீர்வரத்து 1000 கனஅடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு 528 கனஅடியாக இருந்த நீர்வரத்து  காலை 424 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.  79.69 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம்  காலை 79.62 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 41.57 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 80அடிக்கும் கீழ் உள்ளதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று அணையில் இருந்து நீர்திறக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்படும். கருநாடகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குபருவமழை தீவிரமடையாததால் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைப்பது சிக்கல் தான். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது 2024ஆம் ஆண்டில் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு ஜூலை 28ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது கிணற்று நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடியை பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் ‘குறுவை சிறப்புத் தொகுப்பு’ அறிவித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடு பொருட்கள், விதை நெல், மற்றும் பாசன மோட்டார்களுக்குத் தேவையான மானியங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய தவெக அரசு அதுபோல் குறுவை சிறப்புதொகுப்பை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *