கனடாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை?

ஒட்டாவா, ஜூன் 12- ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக் கைகளை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.
இந்த நிலையில், 16 வய துக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கனடா கலாச்சாரத் துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியதாவது:-
சமூக ஊடக நிறுவ னங்கள் தங்களது தளங் கள் குழந்தைகளுக்கு பாது காப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும். அதில் தவறினால், 16 வயதுக் குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டம் அமல்படுத்தப்படும்.
சரிபார்ப்பு முறை
மேலும், டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம் என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை அந்த அமைப்பிடம் விளக்க வேண்டியிருக்கும். அதேசமயம், வயது சரிபார்ப்பு முறையும் கட்டாயமாக்கப்படும். நாம் நமது குழந்தைகளுக்கு துரோகம் இழைத்து வருகிறோம். இனி அது தொடரக்கூடாது. குழந் தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப் படை பாதுகாப்பு நடவடிக் கைகள் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *