வந்தவாசி, ஜூன் 11- வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மறைவுற்ற எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் இணை யரும், நமது ‘விடுதலை’ நாளேட்டின் செய்தியாளர் வே.சிறீதர் அவர் களின் தாயாருமான வே.சுசீலா (வயது 85) நேற்று (10.6.2026) மறைவுற்றார்.
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று (11.6.2026) காலை கைப்பேசி மூலம் வே.சிறீதரிடம் அவரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், ‘விடுதலை’ அச்சக மேலாளர் க.சரவணன் ஆகியோரும் வே.சிறீதரிடம் கைப்பேசி மூலம் ஆறுதல் கூறினர்.
இன்று காலை 10 மணிக்கு செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கேவன், மாவட்ட ப.க.தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு நகர தலைவர் தி.காமராஜ், மாநில திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் வெ.இளஞ்செழியன், தமிழ்நாடு பார்மசிக் கவுன்சில் பதிவாளர் மு.தமிழ்மொழி, செஞ்சி ந.கதிரவன் மற்றும் கழகத் தோழர்கள் கழக சார்பில் வே.சுசீலா அம்மையார் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் சு.பன்னீர்செல்வம், செய்யாறு எல்.அய்.சி. முகவர் க.பாண்டியன், கூட்டம்பட்டு இரவி, செய்யாறு வேதா மெடிக்கல் வி.தேவகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இன்று (11.6.2026) முற்பகல் 11 மணிக்கு அம்மையாரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, வந்தவாசி இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
