சென்னை, ஜூன் 11- டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாள் தெரு முனைக் கூட்டம் சென்னை மேற்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இராமபுரத்தில் 8.6.2026 அன்று மாவட்டச் செயலாளர் க. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கரு அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார்.
தொடக்க உரையை திராவிடர் கழக மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், கழக துணை பொதுசெயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை அருண் உரையாற்றினார்.
நிறைவாக இராமபுரம் ஜனார்த்தனன், நெய்வேலி ஞான சேகரன், முசேகர், அரும்பாக்கம் தாமோதரன், விருகை செல்வம், டெய்லர் கண்ணன், மணி பாரதி மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாமன்ற உறுப்பினர் இராசு மற்றும் கழக தோழர்கள் திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இராமாபுரம் அம்பாள் நகரை சேர்ந்த குப்பன் மற்றும் வசந்த் இருவரும் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்
