கடலூர் மாவட்டம் பண்ருட்டி -திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

1 Min Read

பண்ருட்டி, ஜூன் 11- கடலூர் மாவட்டம் பண்ருட்டி கழக சார்பில் பண்ருட்டியில் 8.6.2026 மாலை 6 மணிக்கு திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. நகர கழகத் தலைவர் ந.புலிக் கொடி வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட கழகச் செயலாளர் க.எழிலேந்தி ,பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன், நகரச் செயலாளர் கோ. காமராஜ் ,திமுக பொதுக்குழு உறுப்பினர் நா.பலராமன், ஒன்றிய கழக தலைவர் இரா.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகப் பேச்சாளர் புலவர் இராவணன், திமுக பரணிச்சந்தர் ஆகியோர் உரைக்குப்பின்

பண்ருட்டி திமுக நகரச் செய லாளரும், நகர் மன்றத் தலைவருமான க.இராஜேந்திரன் தொடக்க உரை ஆற்றினார்.

கழக பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் சிறப்புரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்கள் சிவன், அரசு, சி.தர்ம லிங்கம், திராவிடர் கழக பொறுப் பாளர்கள் டிஜிட்டல் இராமநாதன்,கோ.வேலு, ப.பாஸ்கர், ப.ஆறுமுகம் ,நா.பாவேந்தர்விரும்பி, பெ.பாண்டியன் ,பாமக அன்பு திராவிடன் ,திமுக நிர்வாகிகள் ஆர்.கே.இராமலிங்கம், அ.ம.சங்கர், அன்பழகன், சசிகுமார் ,சம்பத் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். செ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *