வேட்டவலம் நகரக் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி சிறப்புரையாற்றினார்

1 Min Read

வேட்டவலம், ஜூன் 10– திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேட்டவலம் தேரடி வீதி சந்திப்பில் 07-06-2026 அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட கழகக் காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமை தாங்கினார்.

இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் க.சங்கர் அனை வரையும் வரவேற்றார்.

நகரத் தலைவர் சு.ஏழுமலை.திமுக (தெ) ஒன்றிய செயலாளர் இரா.இராஜேந்திரன், திமுக நகர செயலாளர் கீழ்பெண்ணாத்தூர் சி.கே.அன்பு, வேட்டவலம் பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி நடராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்,

திமுக நகர கழக செயலாளர் ப.முருகையன், சாதி கலைத்தோர் சங்க மாநில தலைவர் முகில் வண்ணன், மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட செயலாளர் ப.அண்ணாதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திமுக ஒன்றிய கழக செயலாளர் ஆரஞ்சு ஏ.எஸ்..ஆறுமுகம் கருத்துரை வழங்கினார்.

முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் கழகச் சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் ஆகியோர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் தமிழ் நாடு முதலமைச்சராக அவர் நம் நாட்டு மக்களுக்கு செய்த தொண்டும் செயல்பாடுகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்கள்,

நிகழ்ச்சியில் போளூர் நகரத் தலைவர் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், பூங்கான் மாவட்டக் காப்பாளர் விழுப்புரம், நாகராஜன் நகரத் தலைவர் கண்டாச்சிபுரம், ஆ.சுப்பிரமணி தலைவர் மலையரசன்குப்பம், திமுக நகர இணைச் செயலாளர்கள் ஜி.கே ரமேஷ், டி.சலோமி ராஜா, டி.ரங்கன், மாவட்ட பிரதிநிதி கோ.மாணிக்கம், ஆவண எழுத்தர் ராஜு என்கிற ராதாகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி அரிகிருஷ்ணன், சங்கர், கோபு, ரமேஷ், கலியமூர்த்தி, சிலம்பரசன், மகேஷ், மற்றும் திராவிடர் கழக உறுப்பினர்கள் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக வேட்டவலம் இரா. திருமலை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *