சீடன்: வாரணாசியில் ரூ.180 கோடியில், 130 அடி உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் நிறுவ திட்டம் என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! (‘இந்து தமிழ்திசை’, 10.6.2026, பக்கம் 11)
குரு: திரிநூல் ஏடான ‘தினமலர்’ பாணியில்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் சீடா!
18.8.2009 ‘தினமலர்’ இதோ பேசுகிறது:
தமிழகப் பொதுப் பணித் துறை செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத்திற்குக் கர்நாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கர்நாடக அரசு, குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு, தாமதமாக கடந்த 17 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.
டவுட் தனபாலு: அதனால் என்னங்க…? பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? (‘தினமலர்’, 18.8.2009).
வாரணாசியில் 130 அடி உயரத்தில், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் சிலை நிறுவப் போகிறார்களோ, இல்லையோ, நாடெங்கும் தேனாறும், பாலாறும் பாயப் போகிறது பாரு சீடா!
