குரு – சீடன்!

1 Min Read

சீடன்: வாரணாசியில் ரூ.180 கோடியில், 130 அடி உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் நிறுவ திட்டம் என்று செய்தி வெளிவந்துள்ளதே,  குருஜி! (‘இந்து தமிழ்திசை’, 10.6.2026, பக்கம் 11)

குரு: திரிநூல் ஏடான ‘தினமலர்’ பாணியில்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் சீடா!

18.8.2009 ‘தினமலர்’ இதோ பேசுகிறது:

தமிழகப் பொதுப் பணித் துறை செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத்திற்குக் கர்நாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கர்நாடக அரசு, குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு, தாமதமாக கடந்த 17 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னங்க…? பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? (‘தினமலர்’, 18.8.2009).

வாரணாசியில் 130 அடி உயரத்தில், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் சிலை நிறுவப் போகிறார்களோ, இல்லையோ, நாடெங்கும் தேனாறும், பாலாறும் பாயப் போகிறது பாரு சீடா!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *