ஈரான் போரை நிறுத்த வேண்டும்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

வாஷிங்டன், ஜூன் 10- ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கியது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும் தற்காப்பு தாக்குதல் என்ற பெயரில் அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்தத்தை மீறி வருகின்றன.

இந்தச் சூழலில் ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஐனநாயக கட்சி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் (8.6.2026) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 215 எம்.பி.க்களும், எதிராக 208 எம்.பி.க்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக ஆளும் குடியரசுக் கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

இந்த தீர்மானத்தின் மீது செனட் அவையில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மொத்தமுள்ள 100 எம்.பி.க்களில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு 53 எம்.பி.க்கள் உள்ளனர்.

ஜனநாயக கட்சிக்கு 45 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவையிலும் ஆளும் குடியரசுக் கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை செனட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய முடியும்.

இந்த சூழலில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, “லெபனான் மீதான தாக்குதல் காரணமாக அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும்” என்றார்.

போர் நிறுத்தம்

லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கண்டிப்பு காரணமாக இஸ்ரேல், லெபனான் இடையே கடந்த சில நாட்களாக அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அப்போது போர் நிறுத்தத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. எனினும் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *