மோடி அரசு மக்களுக்கு அளித்த பரிசா? உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

புதுடில்லி, ஜூன் 10- புதுடில்லி: வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை அடுத்தடுத்து உயர்த் தப்பட்ட நிலையில், உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்படும் மானிய விலை எரிவாயு உருளை களின் எண்ணிக்கையை 9இல் இருந்து 4 ஆக ஒன்றிய அரசு குறைத்து உள்ளது. இது ஏழை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.300 மானியமாக வழங் கப்படுகிறது. ஆனாலும், உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.642 செலுத்த வேண்டியிருக்கிறது. இதுவே ஏழை பய னாளிகளுக்கு சுமை யாக இருக்கும் நிலை யில், உஜ்வாலா மானிய சமையல் எரி வாயு உருளைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9 ஆக இருந்த நிலையில் அதை 4 ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இத்திட்டம் கடந்த 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப் பட்டு தற்போது 4 ஆக சுருக்கப்பட்டுள்ளது. இந்த 4 எரிவாயு உருளை களுக்குப் பிறகு ஏழை மக்கள் சந்தை விலையான ரூ.942க்கு வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் வீட்டு பட்ஜெட்டை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது.

நாடு முழுவதும் 10.55 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தை சார்ந்துள்ள நிலை யில், மானிய எரி வாயு உருளைகள் எண் ணிக்கை குறைப்பு கோடிக்கணக்கான ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும் என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில் கூற யிருப்பதாவது, ‘‘மோடி அரசின் வறுமை ஒழிப்பு பிரச்சாரத்தின் உண்மை நிலை என்னவென்றால், முதலில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இருந்த வேலை உரிமை பறிக்கப் பட்டது. இப்போது அவர்களின் ஒருவேளை உணவும் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விறகு அடுப்பிலிருந்து வெளியேறும் புகையி லிருந்து பெண்களை உஜ்வாலா திட்டம் விடு விக்கும் என மோடி 2016இல் கூறினார்.

அப்போது ஆண் டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக் கப்பட்டது. இது கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப்பட்டது. இப்போது 4 ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. 12 எரிவாயு உருளைகள் வழங்குவதாக வாக்குறுதி, ஆனால் 4 மட்டுமே வழங்கும் நோக்கம்.

ஏற்கனவே காஸ் எரிவாயு உருளை விலை மீண்டும் மீண்டும் உயர்த் தப்பட்டதால் 5.56 கோடி பயனாளிகளால் அடுத்த சிலிண்டரை வாங்க முடியாத நிலை உள்ளது. இது தாய்மார்களையும், சகோதரிகளையும் மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது. ஆனால் அவர்களின் துயரத்தை கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி அரசோ அதிகார போதையில் உள்ளது’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *