மானமிகு ஆசிரியரைச் சீண்ட வேண்டாம் -குருமூர்த்திக் கும்பலுக்குப் பதிலடி! – மின்சாரம் –

2 Min Read

அரசியல், தமிழ்நாடு

இந்தக் கார்ட்டூன் மூலம் ‘துக்ளக்’ கூடாரம் என்ன சொல்ல வருகிறது?

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பார்ப்பனர் ஒருவர் வந்துள்ளதால், திருச்செந்தூர் கோயிலில் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற ஒரு கருத்தை வலியுறுத்துவதுதான் ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாளின் நோக்கமாகும்.

சேகர்பாபு என்பவர் தி.மு.க. ஆட்சி யில் இந்து அறநிலையத் துறை அமைச்ச ராக இருந்த போது – கோயிலில் லஞ்சம் வாங்குவது, மோசடி செய்வது கண்டு பிடிக்கப்படவில்லை என்பதைத் தான் சுற்றி வளைத்துக் கூறுகிறது ‘துக்ளக்!’

த.வெ.க. சார்பாக தேர்தலில் வெற்றி பெற்ற இரு பார்ப்பனர்களும் அமைச்சர்களாகி விட்டனர்.

அதில் ஒரு பார்ப்பனருக்கு இந்து அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எங்கே வந்தார்?

‘‘பார்த்தீர்களா – பார்த்தீர்களா! பார்ப்பனர் ஒருவர் இந்து அறநிலையத் துறை அமைச்சராக வந்ததால்தான்  கோயிலில் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. ஆட்சியில் பார்ப்பனரல்லாதாரான சேகர்பாபு இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது கோயிலில் லஞ்சம் வாங்கியவர் மீது நடவடிக்கை இல்லை – பணி நீக்கம் செய்யப்படவில்லை’’ – என்று திராவிடர் கழகத் தலைவரைக் கேலி செய்வது தான் ‘துக்ளக்’ அய்யர்வாளின் சேட்டை – புரிகிறதோ!

‘துக்ளக்’கின் கார்ட்டூன் அடிப்படை யிலேயே ஒரு முக்கிய கேள்வி.

‘இந்து அற நிலையத் துறையே கூடாது. இந்துக் கோயில்கள் இந்துக்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் வர வேண்டும்’ என்று அடம் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். வகையறாவான ‘துக்ளக்’ கும்பல் தன்னை அறியாம லேயே ஓர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது.

இந்துக் கோயில்கள் இந்து அற நிலை யத் துறையின் கட்டுப்பாட்டுக்கும் கீழ் இருப்ப தால் அர்ச்சகர்களின் லஞ்ச லாவண்யம் கண்டு பிடிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது.

அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இல்லாத சிதம்ப ரம் நடராஜன் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்கள் அடிக்கும் பகற்கொள்ளை கொஞ்ச நஞ்சமா?

எடுத்துக்காட்டுக்கு  ஒன்று: சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரம் இதோ:

ஆண்டு ஒன்றுக்கு, சிதம்பரம் நடராஜன் கோயில் வருமானம் ரூ.37,199; செலவு ரூ.37,000; மி்ச்சம் ரூ.199.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின்போது, அதே சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்ட போது வெளியிடப்பட்ட புள்ளி விவரப்படி, 15 மாதங்களில் சிதம்பரம் நடராஜன் கோயில் வருமானம் ரூ.25,12,485.

தீட்சதர்கள் அடித்த பகற் கொள்ளை எத்தகையது என்பது புரிகிறதா?

திராவிடர் கழகத் தலைவரை சம்பந்தமில்லா மல் வம்புக்கு இழுக்கும் ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாளே! ஒன்றிய பிஜேபி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீறிவைகுண்டர் கள்ளப்பிரான்  கோயிலுக்குச் சென்றபோது என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா?

‘‘காணிக்கைப் பணத்தைக் கோயில் உண்டியலில் போடாதீர், அர்ச்சகரின் அர்ச்சகர் தட்டில் போடுங்கோ!’’ (2023 டிசம்பர் 26) என்று சொன்னதையும் குரு மூர்த்தி அய்யர்வாள் கூட்டத்துக்கு நினைவூட்டு கிறோம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *