திராவிட எழுச்சி நாள் கலைஞர் 103ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

1 Min Read

கொள்ளிடம், ஜூன் 9– தமிழர் தலைவரின் அறிவிப்புக்கு இணங்க திராவிடர் எழுச்சிநாள் மற்றும்  முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா மயி லாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கட வாசலில் 6-6-2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக செயலாளர் ம.மச் சகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட கழக துணைத்தலைவர் ஞான.வள்ளுவன் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ. பாண்டுரங்கன் சீர்காழி நகர பக செயலாளர் கவிஞர் வெண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடவாசல் தங்க.நாகராசன் வரவேற்பு ரையாற்றினார்

கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் வைத்தீசுவரன்கோயில் நகர கழகத் தலைவர் வி.ஆர்.முத்தையன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கழகப் பேச்சாளர் மாங் காடு சுப.மணியரசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றியத்தலைவர். சாமிதுரை, வைத்தீசுவரன் கோயில் நகரச் செயலாளர் இரா.இராசேந்திரன்,  கடவாசல் பக.செயலாளர் சா.ஆனந்தன் பக.மகளி ரணி ச.தமிழ்மணி ஆகி யோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக சீர்காழி ஒன்றியச் செயலாளர் சா.செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *