சென்னை, ஜூன் 9- பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் கூடுதலாக 750 மின் சாரப் பேருந்துகளை விரைவில் இயக்க திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
தமிழ்நாடு அரசின் மின்வாகன கொள்கையின் படி, வரும் 2030க்குள் அரசு போக்குவரத்து கழகங்களின் மொத்த பேருந்துகளில் 30 சத வீதத்தை மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் மின்சார பேருந்து சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் மின்சார பேருந்துகளை இயக்கவும், பராமரிக்கவும் தேவையான உள்கட்ட மைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட சிறப்பு மய்யங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக மின்சார பேருந்து பணிமனையாக மாற்றப்பட்ட வியாசர்பாடி, பெருங்குடி, பூவிருந்தவல்லி, தண்டை யார்பேட்டை மற்றும் மத்திய பணிமனைகள் மின்சார பேருந்து சேவைக்கேற்ப மேலும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, ஆலந்தூர், மத்திய பணிமனை, ஆவடி, பாடியநல்லூர், பெரம்பூர், அய்யப்பன்தாங்கள், கே.கே.நகர் ஆகியபணி மனைகளை மின்சார பேருந்துகளை இயக்கும் வகையிலான கட்டமைப்புகளுடன் கூடிய பணிமனைகளாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் திட்ட மிட்டப்படி 750 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் அதற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இந்தப் பணிமனைகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங் களுடன் இணைப்பை மேம்படுத்தும் வகையிலும் சிறிய ரக மின்மின்சார பேருந்துகளையும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
