திருச்சி, ஜூன் 8- உலக சுற்றுச்சூழல் நாளான 05.06.2026 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்
இரா.செந்தாமரை தலைமையில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக மருந்தியல் பட்டயப் படிப்பு மாணவர்கள் பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகத்தின் பசுமையை பேணிக் காக்கும் விதமாக தூய்மைப் பணியினை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந் தாமரை, இளநிலை மருந்தியல் பட்டப் படிப்பு துறை முதன்மையர் முனைவர் சு. கற்பகம் குமர சுந்தரி, மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் ஷகிலா பானு, பேரா. முனைவர் விஜயலெட்சுமி, பேரா. ஜெசிமா பேகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா. தினேஷ் ஆகியோர் வளாகத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
