நாம் அனாதைகள். நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நமக்கு எல்லோரும் எதிரிகளாகத்தான் இருக்கிறார்கள். நாம் மதத்தை எதிர்க்கிறோம்; மதத்தின் பெயரால் பணம் பாழாகிறது என்கிறோம். புராண, சாத்திரங்களை எரிக்க வேண்டும் என்று கருதுகிறோம். கடவுள்களை எதிர்க்கிறோம். அரசியல் சம்பந்தமாகவும் அரசியல் எதிரிகள் நமக்கு இருக்கிறார்கள். யாரோ ஒரு சிலர்தான் நம்மை ஆதரிக்கிறார்கள். ஆகவே நாம் தனியானவர்கள். இருந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். ஏனென்றால் அந்த அளவுக்கு சக்தி இல்லாமலா நாம் இருக்கின்றோம்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1988)
Leave a Comment
