காத்மாண்டு, ஜூன்6- “இந்தியா மட்டுமின்றி, நேபா ளமும் பல இடங்களில் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது” என்று நேபாள பிரதமர் பாலன் ஷா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால், அந்நாட்டு நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் முற்றிலும் முடங்கின.
கடந்த 1816ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகவுலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா – நேபாளம் இடையே எல்லைகள் வரையறுக்கப் பட்டன. இதில் காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல் லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.
ஏற்கெனவே இரு நாடுகளுக்கு இடையேயான 98 சதவீத எல்லைப் பகுதிகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் பாலன் ஷாவின் இந்த புதிய பேச்சு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. பிரதமரின் இக்கருத்து நாட்டின் இறையாண்மையையே அடகு வைக்கும் செயல் என நேபாளி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நாடாளுமன்றம் கூடியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை யின் மய்யப்பகுதிக்குச் சென்று கடும் அமளியில் ஈடு பட்டனர்.
அவரது சர்ச்சைக்குரிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். என்று வலியுறுத்தி முழக்கமிட்டதால் அவையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, இரு அவைகளும் முற்றிலும் முடங்கின.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், “பிரதமரின் கருத்து அரசின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் அல்ல. எல்லைப் பகுதிகளில் நடக்கும் விவசாயம் மற்றும் எல்லைத் தூண்கள் காணாமல் போனது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த எல்லைப் பிரச்சினையில் சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தலையிட வேண்டும் என்று பிரதமர் பாலன் ஷா அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இருதரப்புப் பிரச்சி னையில் மூன்றாம் நாட்டின் தலையீட்டை இந்தியா திட்ட வட்டமாக நிராகரித்துள்ளது. இவ்விவகாரத்தை அடுத்து, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தற்போது தீவிர கண்காணிப்பு மற்றும் அடையாள அணிவகுப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
