கருநாடகாவின் 25ஆவது புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு: அமைச்சரவையில் 12 பேருக்கு இடம்!

2 Min Read

பெங்களூரு, ஜூன் 5- கருநாடக மாநிலத்தின் 25ஆவது புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் 3.6.2026 அன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதலமைச்சராக டாக்டர் ஜி.பரமேஸ்வரும், 12 புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாநிலத்தில் ஆட்சித் தலைமை மாற்றம் ஏற்படுவதற்கு வசதியாக, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடந்த மே 28ஆம் தேதி தனது பதவியை விட்டு விலகினார். அதனைத் தொடர்ந்து, மே 30ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 3ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து, 3.6.2026 அன்று இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

கோலாகல பதவியேற்பு விழா

பெங்களூரு மக்கள் பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் 3.6.2026 அன்று மாலை 4.05 மணிக்கு விழா தொடங்கியது. மாலை 4.15 மணிக்கு டி.கே.சிவக்குமார் தனது குருவான வீரகங்காதரய்யா அஜ்ஜய்யானாவின் பெயரில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதலமைச்சர்: டாக்டர் ஜி.பரமேஸ்வர்.

முக்கிய அமைச்சர்கள்: கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, கிருஷ்ணபைரேகவுடா, பிரியாங்க் கார்கே, யு.டி.காதர், ஈஸ்வர்கண்ட்ரே, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் மருத்துவர் யதீந்திரா, பைரதி சுரேஷ் மற்றும் சரணபிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்:

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு, கேரள முதலமைச்சர் சதிசன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

நாட்டின் ‘மிகப் பெரிய பணக்கார முதலமைச்சர்’ டி.கே.சிவக்குமார்

புதிதாகப் பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமார், நாட்டின் மிகப்பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் டி.கே.சிவக்குமார் (கருநாடகா): ரூ.1,413 கோடி சொத்துகள் (முதலிடம்) சந்திரபாபு நாயுடு (ஆந்திரா): ரூ.931 கோடி சொத்துகள் (இரண்டாமிடம்) ஜோசப் விஜய் (தமிழ்நாடு): ரூ.625 கோடி சொத்துகள் (மூன்றாமிடம்)

கட்சிப் பதவியும், சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் விலகல்

புதிய காங்கிரஸ் தலைவர்: கடந்த 6 ஆண்டுகளாக கருநாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் பொறுப்பை ஏற்றதால் தனது கட்சிப் பதவியை விட்டு விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பி.கே.ஹரிபிரசாத் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற பேரவைத் தலைவர் மாற்றம்:

சட்டமன்ற பேரவைத் தலைவராக இருந்த யு.டி.காதர் அமைச்சராகப் பதவியேற்றதால், தனது பேரவைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அடுத்த சட்டமன்ற பேரவைத் தலைவராக மூத்த உறுப்பினர் ஆர்.வி.தேஷ்பாண்டே நியமிக் கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *