தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை!

அன்பகத்தில் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளைத்
திறந்து வைத்து 75 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்!

சென்னை, ஜூன் 4 – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் நேற்று (3.6.2026).

தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் – ‘செம்மொழி நாள்’ நேற்று (ஜூன் 3). தமிழ்நாடெங்கும் தி.மு. கழகத்தினர், பொதுமக்கள் ஏழை எளியோருக்கு நல உதவிகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாடினர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஜூன் திங்கள் 3 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் சிறு பருவத்திலேயே சீர்திருத்தக் கருத்துகள் அவர் நெஞ்சில் வளரத் தொடங்கின. அவற்றின் அடிப்ப டையில் பள்ளிப் பருவத்திலேயே ‘முரசொலி’ கையெழுத்து ஏடாகவும், பின்னர் மாத வார ஏடாகவும், நாளேடாகவும் வளர்ந்து இன்றும் பத்திரிகை உலகில் ஒரு சிறந்த ஆயுதமாகப் பயன்படுகிறது. முத்தமழறிஞர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா ஆகியோரைச் சந்தித்தபின், அவர்களுடைய கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, அவற்றை தம்வாழ் நாள் முழுவதும் பரப்பி அவ்வழியில் இறுதிவரை வாழ்ந்தவர்.

1957 ஆம் ஆண்டு குளித்தலைச் சட்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்பு, 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து, 1971, 1989, 1996, 2006ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல மைச்சராகப் பணியாற்றி பல எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கிச் சிறப்பு செய்தவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்றிட எண்ணற்ற சிறப்பான சமூக நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் குடிசைப் பகுதி மாற்று வாரியம், பேருந்துகள் நாட்டுடைமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்துரிமை, உழவர் சந்தை, வருமுன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம், மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம்,அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழும்போது வரலாறாகவும், மறைந்தும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நிலைத்து வாழ்கின்ற அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த ஜூன் 3 ஆம் நாள் “செம்மொழி நாள்” என கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய முலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் – தமிழ்நாடு அரசினால் அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது.

80 ஆண்டுகால பொது வாழ்க்கை!

இப்படி பார்போற்றும் வகையில் தனது 14 ஆம் அகவைமுதல் 94ஆம் அகவை வரையில் சுமார் 80 ஆண்டு காலம் மக்கள் பணிக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர். அப்பேற்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்க ளின் 103 ஆவது பிறந்த நாள் நேற்று (3.6.2026)!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *