விடுதலை நகர், ஜூன் 4- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக மாதாந்திர கூட்டம் மாவட்ட மகளிர் அணித் தலைவி ஜெ.தேவி சக்திவேல் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை இரா.தெ.வீரபத்திரன் முன்னிலையில் கலந்துரையாடல் 31.5.2026 அன்று காலை பத்து மணிக்கு சென்னை விடுதலை நகர் பெரியார் பதிப்ப கத்தில் நடைபெற்றது கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
பொம்மலாட்டக்கலைஞரும் மாநில பகுத்தறிவு கலைத்துறைத் தலைவருமான கலைமாமணி கலைவாணன் அவர்களின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி காத்து மரி யாதை செய்யப்பட்டது.
வரும் 08.06.2026 அன்று நடைபெற இருக்கிற டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள்விழா தெருமுனைக் கூட்டத்திற்கு உறுப்பினர்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பை வழங்கவும் கூட்டத்தை மிகவும் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடத்தத் தீர்மானிக்கப் பட்டது.
அடுத்த மாதாந்திர கலந்துரை யாடல் கூட்டம் தோழர்கள் கண்டிப் பாக தங்களது இணையர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மகளிர் அனைவரும் கலந்து கொள்வதால் இரவு உணவு ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
கடைசியாக துணைத் தலைவர் ஆர்.கலைச்செல்வன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
கூட்டத்தில் நீலாங்கரை
இரா. தே வீரபத்திரன், வேலூர் பாண்டு, நங்கைநல்லூர தமிழினியன், ஆர். கலைச்செல்வன், பி.சி. ஜெய ராமன், ஆனந்தன், தேவி.சக்திவேல், புலவர் சங்கரலிங்கம், மணிகண்டன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலைஞர் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம் நடத்த தீர்மானம்
Leave a Comment
