திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், ஜூன் 4- திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் 01.06.2026 அன்று மாலை 6.00 மணியளவில் கலந்துரையாடல்  கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக திருப் பத்தூர்  மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர்  பெரியாரின் பெருந்தொண்டர், பெரியார், அண்ணா, கலைஞரோடு பயணித்தவர், மின்சாரதுறை ஓய்வூதிய சங்க தலைவர் எம். ஞானபிரகாசம்  அவர்களின் 89ஆவது பிறந்தநாள் மகிழ்வாக மாவட்ட கழக  சார்பில்  அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட் டது.

இக் காலக்கட்டத்தில் இளை ஞர்களிடையே  தந்தை பெரியாரின் சிந்தனைகளை மேலும் மிகத் தீவிரமாக  இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்கும் விதமாக மாதந்தோறும் இளைஞர்களிடையே  கலந்துரையாடல்  கூட்டம் நடத்து வது.

விடுதலை நாளிதழுக்கு அதிக அளவில் சந்தாக்களை சேர்ப்பது.

ஆசிரியர் அறிவுறுத்தலுக்கிணங்க கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை  முன்னிட்டு வரும்  ஜூன் 05,09  ஆகிய தேதிகளில்  திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் மிகச் சிறப்பாக  பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்) எம். என். அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட  அமைப்பாளர்) பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்)  சி.எ.சிற்றரசு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) இரா. கற்பகவள்ளி (மாவட்ட மகளிரணித் தலைவர்)  தி. நவநீதம் (மாவட்ட மகளிரணிச் செயலாளர்) பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப. க.)  சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளை தலைவர்) அரவிந்த் (நகர இளைஞரணி செயலாளர்) மற்றம் பல கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *