கபிஸ்தலத்தில் சிந்தனைக்களம் – 13

2 Min Read

கபிஸ்தலம், ஜூன் 4- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம், மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் 30.05.2026 அன்று மாலை 06:30 மணிக்கு பகுத்தறிவாளர் கழ கத்தின் சார்பில் சிந்தனைக் களம் – 13 நடைபெற்றது.

கூட்டத்திற்கு மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் கா.முருகானந்தம் தலைமை யேற்றார்.

பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி உடைய முதல்வர் சே.தீபக் அனை வரையும் வர வேற்றார்.

மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் வே. துரைசாமி, ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் சு.கலையமூர்த்தி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.சேகர் ஆகி யோர் முன்னிலை வைத் தார்கள்.

தலைவர் தன்னுடைய உரையில் இன்றைய செய்முறை அறிவியல் விளக்க உரை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கணினிக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு, கணினிக்கும் மனித மூளைக்கும் உள்ள ஒற்றுமை ,வேற்றுமைகள் எல்லாவற்றையும் எடுத்துரைத்து நிகழ்வை உற்றுப் பாருங்கள், உங்கள் அறிவை பயன்படுத்துங்கள், ஆராய்ந்து முடிவு செய்யுங்கள் என்ற வேண்டு கோளோடு முடித்தார்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி .மோகன் செய்முறை விளக்க உரையாற்ற வந் திருக்கிற திண்டுக்கல் ஈட்டி கணேசனை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். ஈட்டி கணேசன் தன்னுடைய உரையில் அறிவியல் பூர்வமான செயல்முறைகள் எப்படி எல்லாம் மந்திரமாக சொல்லப்படுகிறது என்பதையும், இது மந்திரம் இல்லை தந்திரம் தான் என்பதையும் அழகாக எடுத்துரைத்தார்.

பெருமளவில் மாணவர்கள் பங்கேற்ற இவ்விழாவில் மாண வர்களைக் கொண்டே அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தினார் . எதுவும் மந்திரம் இல்லை எல்லாமே அறிவியல் அடிப்படையில அமைந்தது தான் என்பதை எடுத்துச் சொல்லி மனித மூளைக்கு வேலை கொடுங்கள் என்ற வேண்டுகோளோடு நிகழ்வினை எட்டு மணிக்கு முடித்தார். செய்முறை விளக்க உரையாற்ற வந்திருந்த திண்டுக்கல் ஈட்டி கணேசனுக்கு பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த பெ.குணசேகரன் சிறப்பு செய்தார்கள் .

தொடர்ந்து மூத்த தமிழறிஞர் விருது பெற்ற கோடையிடி குருசாமி ஈட்டி கணேசனுக்கு சிறப்பு செய்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வருகையாளர்களுக்கு நூல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முதன் முதலாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மருத்துவக் கல்லூரி மாணவி பா. யாழினினுக்கு, நாச்சியார்கோவில் வெங் கடேசனும், அன்புமணி கணேசனுக்கு, கோடையிடி குருசாமியும், தென்சருக்கை வள்ளலார் அடியார் ராமலிங்கத்துக்கு திராவிடர் சமுதாய நில கல்வி அறக் கட்டளை உறுப்பினர் பி.ராஜேந்திரனும், பொதுப் பணித்துறை கலிய பெருமாளுக்கு, பொம்மை கணேசனும், கபிஸ்தலம் இலாவண்யாவுக்கு, ஆசிரியர் மா.துரையரசனும், தமிழ்வாணினுக்கு ஆசிரியர் குமாரும், சுருதி வினையாவுக்கு நெடுந்தெரு சரவணனும், மாணவி யுகா சிறீக்கு, இலுப்பக்கோரை இராவணனும், நெடுந்தெரு இனியனுக்கு கல்வியாளர் மேனகா நெப்போலியனும் நூலினை வழங்கி சிறப்பித்தார்கள்.

நன்றி உரையினை கும்ப கோணம் கழக மாவட்ட மகளிர் அணி;த தலைவர் எம்.திரிபுரசுந்தரி வழங்கிட 8 மணிக்கு கூட்டம் முடி வுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *