பள்ளிகளில் ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாட திட்டம்! பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தகவல்

மதுரை, ஜூன் 2- மாணவர்கள் விளையாட் டுத் துறையில் சிறந்து விளங்க புதிதாக ‘உடற் கல்வி பிரிவு’ என்ற புதிய பாடத்திட்டத்தை உருவாக்கத் திட்ட மிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நேற்று (1.6.2026) பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு மற்றும் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.தயாளன் தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1, 2, 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில மாற்றங்களுடன் பாட நூல்கள், பயிற்சிப் புத்தகம் இரண்டையும் இணைத்து புதிய பாட நூல்கள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அடுத்தாண்டில் 4 முதல் 8 வகுப்புக்கும், அடுத்து 9 முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட உள்ளது.

தலைமை ஆசிரியர் களுக்குத்தான் தலைமைப்பண்பு இருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்களின் பிரச்சினை கள், மாணவர்களின் பிரச்சினைகளை நெகிழ்வுத் தன்மையோடு சமநிலைப்படுத்தி வழி நடத்தினாலே பள்ளிகள் சாதனைப் பள்ளிகளாக மாறும்.

ஆசிரியர்கள் மாணவர்களிடையே விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

விளையாட்டில் ஆர்வமுடைய மாணவர்கள் படிப்பில் தொய்வு இருக்கும். அம்மாணவர்களை மட்டம் தட்டாமல் ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாடத் திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களின் தனித் திறன்களை கண்டறிந்து வெளிக்கொணர வேண்டும். ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருந்தாலே போதும்.

பெற்றோர் எந்தக் குழந்தையையும் ஒப்பிடக் கூடாது. இவ்வாறு பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *