சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (31.5.2026) வெளியிட்ட அறிக்கை:
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் நாட்டில் மாடுகளை அறுப்பது தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் விழாவுக்கு முந்தைய நாள் வழங்கப்பட்ட தீர்ப்பு பல இஸ்லாமியர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தையும், சமுதாயத்தில் குழப்பம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.
இந்த வழக்கின் போது ஆளும் அரசு தனது தரப்பு வாதத்தை பெயரளவிற்குக்கூட வைத்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நீதி பரிபாலன முறையில் ஒரு வாதியாக உள்ள அரசு தனது கடமையை செய்யத் தவறி விட்டதைத்தான் இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.
சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதை தமிழ்நாடு முஸ்லிம்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
