ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?

2 Min Read

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயமா?
தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளு வருக்குக் காவிச் சாயமா? தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்! ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நமக்கு மிகுந்த வேதனையையும்,
அதிர்ச்சியையும் தருகிறது

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், ஆளுநர் மாளிகையாகிய ‘மக்கள் பவன்’ என்ற அந்த மாளிகையில் ‘திருவள்ளுவர் திருவிழா’ என்ற ஒன்றைக் கொண்டாடுவதாகவும், அதில் திட்ட மிட்டே திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் அடித்தி ருப்பதாகவும் இன்றைக்குச் செய்திகள் வந்திருப்பது நமக்கு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.

திட்டமிட்டே தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் திருவள்ளுவரை, காவி மயமாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டித்து, இதுவரையில் பல முறை கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு, அந்தக் காவி நிறம் எல்லாம் திருவள்ளுவர் சிலையில் இடம்பெற முடியாத அளவிற்குத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.

திருவள்ளுவருக்குக் காவிச் சாயமா?
தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்!

இந்தப் போக்கு, அதற்கு முன்னால் அந்த மாளிகையில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான
ஆர்.என்.இரவி அவர்கள் தொடங்கியது. அதைவிட ஒருபடி அதிகமாக, இப்போது பொறுப்பு ஆளுநராக இருக்கக்கூடிய அர்லேகர் என்பவர், அரசு நிகழ்வில் ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாட வைப்பது – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம்; இப்போது திருவள்ளுவர் திருவிழாவைக் கொண்டாடுகிறோம் என்கிற பெயரால், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்குச் சவால் விடுவதைப்போல, திருவள்ளுவருக்குக் காவியடித்திருக்கிறார்கள். அதனை எதிர்த்து மிகப்பெரிய ஒரு கிளர்ச்சி அனைவராலும் நடத்தப்படவேண்டிய அவசியம் உருவாக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டாமா?

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசு, ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கப் போகிறதா? தன்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டாமா?

ஆகவே, உடனடியாக இதற்கு நடவடிக்கைகள் தேவை. தமிழ்நாடு முழுவதும் இதைக் கண்டித்து அறப்போராட்டங்கள் வெடிக்கும்.

 கி.வீரமணி

  தலைவர்,

திராவிடர் கழகம்

 

31.5.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *