திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் துணைச் செயலாளர் ஜீவானந்தம் (வயது 63) சிறிது காலம் உடல் நலமின்றி சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு (31.5.2026) முடிவெய்தினார். தன்னுடைய இளமைக் காலங்களில் முழு நேர திராவிடர் கழகப் பணியாளராக தொண்டாற்றியவர். அந்தப் பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றிலும் பங்கு பெற்று இறுதி வரை கழக கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கீழ் செயலாற்றியவர். இவருக்கு சிவசங்கரி என்ற வாழ்விணையரும், அறிவுச் செல்வன், கிரண்பேடி என இரு பிள்ளைகள் உண்டு. மறைவுச் செய்தி அறிந்த கழகப் பாதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜீவானந்தம் வாழ்விணையருக்கு ஆறுதல் கூறி தலைமைக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள், பிற இயக்கத் தோழர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
