‘‘தமிழன் இல்லம்’’ என்றால்…..

‘‘தலைவர் பெரியார் அவர்கள் தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க ‘விடுதலை’யைத்  தொடங்கினார்கள். “விடுதலை’’யின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால்  அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல்மட்டத்திற்கும் அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால், இப்போதுதான் அவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்துகொண்டு இருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடத்தக்கூடிய ‘விடுதலை’யினை தமிழர்கள் ஒவ்வொரு வரும் வாங்கிப் படிக்கவேண்டும். ‘விடுதலை’ வாங்கிப் படிப்பது தமிழர் கள் ஒவ்வொருவரின் கடமை யாகக் கருத வேண்டும்.

தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், ‘ விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.’’

‘விடுதலை’ பணி மனை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
“விடுதலை’’  2-11-1965.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *