தரக்கட்டுப்பாட்டில் குறைபாடு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பானில் திடீர் தடை உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஆய்வில் அம்பலம்

1 Min Read

டோக்கியோ, மே 30- இந்திய மாம்பழங்களில் பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, ஜப்பான் அரசு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாம்பழ இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களின் பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய மாம்பழங் களுக்கு ஜப்பான் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ரஹ்மான் பூரில் உள்ள நீராவி வெப்பச் சிகிச்சை மய்யத்தில் ஜப்பான் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிருமி நீக்கம் செய்யும் முறையில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட ஆய்வுச் சான்றிதழ்களைக் கொண்ட இந்திய மாம்பழ ஏற்றுமதிப் பொருட்களை ஏற்பதில்லை என ஜப்பான் யோகோஹாமா தாவரப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தத் தடையால் அல்போன்சா, கேசர், லங்ரா, பங்கனப்பள்ளி போன்ற இந்தியாவின் உயர்தர ரக மாம்பழங்களின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கெனவே எல் நினோ காலநிலை மாற்றத்தால் 85 முதல் 90 சதவீதம் வரை பயிர் இழப்பைச் சந்தித்துள்ள மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *