கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பெண்கள் இட ஒதுக்கீடு: சட்டம் அவசியம், ஆனால் ஏன் இந்த அவசரம், அனைவரையும் கலந்து ஆலோசியுங்கள் என்கிறது தலையங்கம்.

* பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு குறித்த வரைவு மசோதாவை வெளியிடுங்கள், மோடி அரசுக்கு பொது சமூக அமைப்பு பிரதிநிதிகள் வேண்டுகோள்.

* தொகுதி மறுசீரமைப்பு ஆபத்து குறித்து தென் மாநிலங்கள் ஒற்றுமையுடன் போராட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் வேண்டுகோள்.

* தென்மாநிலங்கள் அதிக வரி நிதியை ஒன்றிய அரசுக்கு தர முடியாது, டில்லிக்கு சலாம் போட முடியாது. வளர்ச்சி தரும் மாநிலங்களுக்கு ஏன் மோடி அரசு ஆதரவு தர மறுக்கிறது? தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் காட்டம்.

* பிரதமர் பதவியில் இருந்து விலகி, இங்கே முதலமைச்சராக விருப்பமா? மேற்கு வங்க அனைத்து தொகுதிகளில் நான் நிற்பதாக கருதி பாஜக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறிய பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி.

* ஹங்கேரி தேர்தல், வலதுசாரி அரசு வீழ்த்தப்பட்டது. டிரம்ப் ஆதரவாளரான விக்டர் ஆர்பன் தோல்வி. பீட்டர் மக்யார் என்ற புதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நிதிஷ்குமார் பதவி விலகலுக்குப் பிறகு, பீகார் அரசு ‘குஜராத்திலிருந்து இயக்கப்படும்’: “யார் முதலமைச்சராக பொறுப்பேற்றாலும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க மாட்டார்; ஏனெனில், யாருடைய பெயரை முன்வைத்து என்.டி.ஏ. கூட்டணி வாக்குகளை கோரியதோ, அந்த நபரே தற்போது அகற்றப்படுகிறார்,” என தேஜஸ்வி விமர்சனம்.

தி இந்து:

* காங்கிரஸ் தொகுதி மறுவரையறையை ஆதரிக்க வாய்ப்பில்லை: பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்துவதற்கும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்வதற்கும் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வின் போது, “தவறாமல் அவையில் ஆஜராகி, கட்சியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி திங்களன்று தனது மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தரவை’ (Three-line whip) பிறப்பித்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வி குறித்து தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *