அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 4 பேர் பதவி விலகல்! தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு!

1 Min Read

சென்னை, மே 29–– அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை

காலியாக உள்ள தொகுதிகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

ஏற்கனவே திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில், தற்போது புதியதாக பின்வரும் 4 தொகுதிகள் இணைந்துள்ளன: அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *