தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் கருத்தரங்கம்!

1 Min Read

தஞ்சை, மே 29- தஞ்சை பெசண்ட் அரங்கில் 23.5.2026 அன்று தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், “பெரியார் 360” எனும் கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.

பல்வேறு தலைப்புகளில் பெரியாரின் சிறப்புகளை கருத்தரங்கில் பதிவு செய்தனர்.

கருத்தரங்கிற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். பல்வேறு கோணத்தில் கருத்தாளர்கள் பெரியார் பற்றிய தங்களின் பார்வையைப் பதிவு செய்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்ஞரைஞர் அமர்சிங் கலந்துகொண்டார்.

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், இடஒதுக்கீட்டில் முழுமையான சமூகநீதி வழங்கல், பெரியார் – அம்பேத்கர் கொள்கைகளை பரப்புரை செய்தல், ஆறாம் வகுப்பு முதல் பாடத் திட்டத்தில் சமூகநீதி வரலாற்றை முழுமையாக இடம் பெறச் செய்தல், புரட்சிச் சிந்தனையை அறிந்திட “பெரியார் எனும் உரைகல்லே” உரிய கருவியாகக் கொள்ள வேண்டும் முதலான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தங்க.குமரவேல் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *