ரூ.2.87 லட்சம் கோடி ஈவுத் தொகை அளித்த ரிசர்வ் வங்கி மோடி அரசின் நிதிநிலை சரியில்லை: காங்கிரஸ் தகவல்

1 Min Read

புதுடில்லி, மே 28- மோடி அரசின் நிதிநிலை சித்தரிக்கப்படுவது போல சிறப்பாக இல்லை. பெரும் போனஸ் அளித்து ரிசர்வ் வங்கி அரசுக்கு ஒரு சலுகை செய்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ. 2.87 லட்சம் கோடி ஈவுத்தொகையை வழங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவுப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ஒன்றிய அரசின் நிதிநிலை சித்தரிக்கப்படுவது போல அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதற்கு, ரிசர்வ் வங்கி அரசுக்கு ஒரு சலுகை செய்து பெரும் போனஸ் அளித்துள்ளது என்பதே சான்றாகும்.

தன்னால் பராமரிக்கப்படும் எதிர்பாரா இடர் காப்பு நிதியை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தி வந்த ரிசர்வ் வங்கி, 2025-2026 நிதியாண்டிற்காக அதனைக்குறைக்க முடிவு செய்தது. இதன் விளைவாகவே, ஒன்றிய அரசுக்கு அது வழங்கும் ஈவுத்தொகையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டிற்கான எதிர்பாராத இடர் காப்பு நிதி குறைக்கப்படாமல் இருந்திருந்தால் அரசுக்குக் கிடைத் திருக்கக்கூடிய தொகையை விட, கூடுதலாக ரூ. 92,000 கோடி என்ற பெரும் போனஸ் ஒன்றிய அரசுக்குக் கிடைத் துள்ளது’ என்று குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *