மாணவர்களுக்கு கோடைக்கால சிந்தனை முகாம்!

1 Min Read

24/05/2026‌ ஞாயிறு அன்று விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும் இராஜபாளையம் ஊர்ப்புற பெண்கள் சிறுவர் நூலகமும் இணைந்து மாணவர்களுக்கு கோடைகால மாணவர் சிந்தனை முகாமை சிறப்பாக நடத்தினர்

மாணவர்களுக்கு, “தமிழ்நாடு தந்தை பெரியாருக்கு முன் /பின்” என்ற தலைப்பிலே பேச்சுப்போட்டி நடந்தது…..இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தந்தை பெரியாரால் பண்பட்ட தமிழர் வரலாற்றைச் சிறப்பாகப் பேசினர்.

‘சுற்றுச்சூழல்’ தலைப்பிலே ஓவியப் போட்டி நடந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் மாணவர்களுக்கு பூ.சிவகுமார் ‘மந்திரமா.. தந்திரமா?’ அறிவியல் நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர் தெளிவூட்டினார்.

பரிசு பெற்ற மாணவர்களுக்கு கேடயமும்… சான்றிதழும் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் சோ.ஞானராசு தலைமை வகித்தார்.

திராவிடர் கழக மாவட்டத்தலைவர் இல்.திருப்பதி வரவேற்புரையாற்றினார்.

முன்னிலை வகித்த பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள்

கோ.பெத்தையா, வழவை முத்தரசன் ஆகியோர் மிகச்சிறப்பாக நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இரா.பாண்டிமுருகன், ஹரிராம்சேட், யாழ் பிரபா, தமிழ்ப் பித்தன், எழுத்தாளர் மதுமிதா, பேச்சாளர் சக்திமகேசுவரி மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியாக நூலகர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *