24/05/2026 ஞாயிறு அன்று விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும் இராஜபாளையம் ஊர்ப்புற பெண்கள் சிறுவர் நூலகமும் இணைந்து மாணவர்களுக்கு கோடைகால மாணவர் சிந்தனை முகாமை சிறப்பாக நடத்தினர்
மாணவர்களுக்கு, “தமிழ்நாடு தந்தை பெரியாருக்கு முன் /பின்” என்ற தலைப்பிலே பேச்சுப்போட்டி நடந்தது…..இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தந்தை பெரியாரால் பண்பட்ட தமிழர் வரலாற்றைச் சிறப்பாகப் பேசினர்.
‘சுற்றுச்சூழல்’ தலைப்பிலே ஓவியப் போட்டி நடந்தது.
நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் மாணவர்களுக்கு பூ.சிவகுமார் ‘மந்திரமா.. தந்திரமா?’ அறிவியல் நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர் தெளிவூட்டினார்.
பரிசு பெற்ற மாணவர்களுக்கு கேடயமும்… சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் சோ.ஞானராசு தலைமை வகித்தார்.
திராவிடர் கழக மாவட்டத்தலைவர் இல்.திருப்பதி வரவேற்புரையாற்றினார்.
முன்னிலை வகித்த பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள்
கோ.பெத்தையா, வழவை முத்தரசன் ஆகியோர் மிகச்சிறப்பாக நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இரா.பாண்டிமுருகன், ஹரிராம்சேட், யாழ் பிரபா, தமிழ்ப் பித்தன், எழுத்தாளர் மதுமிதா, பேச்சாளர் சக்திமகேசுவரி மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக நூலகர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
