முத்தமிழ் அறிஞர் கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் பரப்புரை கூட்டத்தை
சிறப்பாக நடத்துவது என முடிவு!
அரூர். மே 28- அரூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 27- 5 -2026 ஆம் நாள் மாலை 5 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் மாவட்ட செயலாளர் கு. தங்கராஜ் வரவேற்பு உரையாற்றினார்.
மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தென்றல் பிரியன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொன். அய்யனார் தொழிலாளர் அணி தலைவர் சிலம்பரசன், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், அரூர் ஒன்றியத் தலைவர் இராவணன், உள்ளிட்ட தோழர்கள் கருத்துரையாற்றினர். மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி கருணாநிதி நிறைவுரையாற்றினார்.
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவிப்பின்படி கழக எழுச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்த நாளை தாய்க் கழகமான திராவிடர் கழக சார்பில் அறிவிக்கப்பட்ட 103 பொதுக் கூட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்கள் அரூர் கழக மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5-6- 2026 ஆம் தேதி அரூர் ஒன்றியம் கீரைப்பட்டியில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பங்கேற்று சிறப்புரையாற்றும் பொதுக் கூட்டத்தையும் , 9-5-2026 ஆறாம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப் பட்டியில் கழக சொற்பொழிவாளர் காஞ்சி கதிரவன் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கும் பொதுக் கூட்டத்தையும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
