திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

1 Min Read

மயிலாடுதுறை, மே 27– மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.5.2026 அன்று மாலை 5.30 மணி அளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடை பெற்றது.

தமிழ்நாடு

குத்தாலம் நகரத் தலைவர் சா.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரெ.செல்லதுரை, பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தங்க.செல்வ ராஜ், நகரத் தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றியத் தலைவர் அ.சாமிதுரை, குத்தாலம் ஒன்றியத் தலைவர் தி.சபாபதி, சீர்காழி ஒன்றியத் தலைவர் ச.சந்திரசேகரன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பூ.பாண்டுரங்கன் ஆகியோர் கருத் துரை வழங்கியதைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் நிறைவாக தலைமை உரையை நிகழ்த்தினார்.

மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்ற அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவு நாள் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளின் வரவு-செலவு கணக்கு படிக்கப்பட்டது. மாவட்ட இளைஞரணித் தலைவர் க.அருள்தாஸ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இரங்கல் தீர்மானம்

கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி. பாண்டியன் செம்பனார்கோயில் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.கே.கவுதமன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேகதாது அணை கட்டப்படு வதை தடுத்து நிறுத்தக் கோரி திருவாரூரில் 31.5.2026 காலை 9 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் நாகம்மையார் நினைவு நாள் நிகழ்வினை 5.6.2026 வெள்ளிக்கிழமையன்று மாலை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் மயிலாடுதுறையிலும், தலைமைக் கழக அறிவிப்பின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் 6.6.2026 சனிக்கிழமையன்று கொள்ளிடத்திலும், 8.6.2026 திங்கட் கிழமையன்று குத்தாலத்திலும் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *