திருவனந்தபுரம், மே 27 கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியில் ஜாதிய அடையாளங்களுக்கும் மூடநம்பிக்கை களுக்கும் கேரளாவில் இடமே இருக்க வில்லை. ஆனால், காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) பதவியேற்ற சில நாட்களிலேயே பழைய பிற்போக்குத்தனம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
புதிய முதலமைச்சர் பதவியேற்கும்போது தன் பெயரை ‘வடசேரி தாமோதரன் மேனன் சதீசன்’ (வி.டி.சதீசன்) எனச் ஜாதி வாலை காட்டிப் பிரகடனப்படுத்தியுள்ளார். இதற்குச் சொந்தக் கட்சியான காங்கிரசின் மாநில பொதுச்செயலாளர் தீப்தி மேரி வர்கீஸ், பஞ்சாயத்து உறுப்பினர் ஜின்டோ ஜான் உள்ளிட்டோரே முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமா? கூட்டுத்தொகை ‘13’ என வரும் எண் கொண்ட அரசு காரை ஓட்ட எந்தவொரு காங்கிரஸ் அமைச்சருக்கும் துணிவில்லை; அது ராசியில் லாத எண்ணாம்! இடதுசாரி ஆட்சியில் இதே 13-ஆம் எண் காரை அமைச்சர்கள் பெரு மையோடு பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு மண்ணில் ஜாதி யையும் மூடநம்பிக்கையையும் விதைக்கும் காங்கிரஸின் இந்தச் செயல் கேரள மக்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதலமைச்சரின் செயலாளராக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்
சிபிஎம் கடும் கண்டனம்
திருவனந்தபுரம், மே 27 கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அய்க்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆட்சியை கைப்பற்றி யது. முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கு செய லாளராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி. ராஜீவ் கூறுகையில், “கேரளத்தின் புதிய முதலமைச்சரின் செயலாளராக, அம்மாநிலத்தின் தலை மைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் நியமிக்கப்பட்டிருப்பது மாநிலத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களின் நேர்மை, நியாயத்தன்மை மீது சந்தேக நிழலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற ஒரு நியமனத்தை அங்குள்ள பாஜக அரசு செய்த போது, மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி, ‘பெரிய திருட்டு, பெரிய வெகு மதி’ என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது காங்கிரஸின் கருத்து என்ன?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
