திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் 17 ஆவது நிகழ்ச்சி!

திருவெறும்பூர், மே 26- திருவெறும்பூர் பெரியார் பேசுகிறார் 17 ஆவது  நிகழ்ச்சி 24.05.2026 அன்று மாலை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

“சமூக ஊடகங்களும், சமூகச் சீர்கேடுகளும்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் பேசினார். அவர் பேசும்போது, அறிவியல் வளர்ச்சி என்பது ஒவ்வொரு முறையும் மாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் அது வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா? வீழ்ச்சியில் முடிவடைகிறதா? என்பது இந்தச் சமூகம் பயன்படுத்தும் முறையைப் பொருத்தது.

நடந்த முடிந்த தேர்தலில் கூட கண்மூடித்தனமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போலி பிரமாண்டத்தைக் கட்டியெழுப்பி, பெரும்பான்மை தோற்றத்தை உருவாக்கி, மாற்றம் நிகழ்ந்தால்  தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று மூளைச் சலவை செய்யப்பட்டது. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் சிந்திக்கவில்லை.

அதேநேரம் பெரியார் குடும்பங்கள், அவர்கள் வீட்டில் உள்ள பிள்ளைகள், அந்த இளம்தலைமுறைகள் தெளிவாகவும், உறுதியாகவும் செயல்பட்டது மிகுந்த வரவேற்பிற்கு உரியது. எதையும் கொள்கைப் பார்வை யோடு அணுகுவது எவ்வளவு முக்கியமானது என்பதும் இதன் மூலம் நிரூபணமானது. “சமூக ஊடகங்களை அதிகமாகவும், பொழுதுபோக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிற மாணவர்களின் கல்வி எவ்வளவு தூரம் பாதிக்கிறது”, என்கிற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையையும் மேற்கோள்காட்டி வி.சி.வில்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திராவிட தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், மு.முரளிகிருஷ்ணன், கு.இராமமூர்த்தி, ஆ.பாண்டிக்குமார், பு.வி.கியூபா, கரு.புனிதவதி, க.புனிதா, ஆ.இராஜாராமன், அ.அன்பு லதா, மு.பாண்டி, ஆ.அசோக்குமார், அ.தமிழ்க்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி 6 மணிக் குத் தொடங்கி, சரியாக 7.30 மணிக்கு நிறைவுபெற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *