நாடு முழுவதும் கொளுத்தும் வெயில் அடுத்த 5 நாட்களுக்கு ‘வெப்ப அலை’ நீடிக்கும்! வானிலை மய்யம் எச்சரிக்கை!

புதுடில்லி, மே 26- நாடு முழுவதும் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை (Heat Wave) நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.

வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

கடுமையான கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக, தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 மாநிலங்களுக்கு
ரெட் அலர்ட் எச்சரிக்கை

இந்தியாவின் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்குப்பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பின்வரும் 5 வட மாநிலங்களில் மே 29 வரை மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மய்யம் எச்சரித்துள்ளது:

பஞ்சாப், அரியானா, டில்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடலோர மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கோடை வெப்பத்தின் அளவு, வழக்கமான இயல்பு நிலையை விட அதிகமாகவே பதிவாகும் என்று வானிலை ஆய்வு மய்யம் குறிப்பிட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், போதிய அளவு தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *