சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கட்டப்படும் அண்ணா சாலை உயர்மட்டப் பாலத்தை செப்டம்பர் மாதம் திறக்கத் திட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை, மே 26- சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை அண்ணா சாலையில் கட்டப்படும் உயர் மட்ட இரும்பு மேம்பாலம் செப்டம்பரில் திறக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

மேம்பாலம்

சென்னை நகரின் முக்கிய போக்குவரத்து பகுதியான அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை 3.2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்த திட்டத்தின் சுமார் 68 சதவீதப் பணிகள் வெற்றி கரமாக முடிக்கப் பட்டுள்ளன.

தற்போது மேம்பாலத்தின் ராட்சத கான்கிரீட் தளங்கள் (Slabs) 1.1 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன. அடித்தளப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந் துள்ளன. மொத்தம் 131 டெக்குகள் (Decks) அமைக்க வேண்டிய இத்திட்டத்தில் இதுவரை 32 டெக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மே மாத இறுதிக்குள் மேலும் 8 டெக்குகளைப் பொருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மேம்பால திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், பெரும்பாலான முக்கிய கான்கிரீட் கட்டமைப்புகள் சென்னைக்கு வெளியே முன்கூட்டியே வார்ப்பு (Pre-cast) செய்யப்பட்டு கொண்டு வரப்படுகின்றன.

மகாராட்டிரா, கோவா மற்றும் அய்தராபாத் ஆகிய இடங்களில் உள்ள உற்பத்தி அலகுகளில் தயாரிக்கப்பட்டு, சென்னையில் அந்த பாகங்களை இணைக்கின்றனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முழுப் பணிகளையும் முடித்து மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நெடுச்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திட்டமிட்ட காலக்கெடுவின்படி பணிகள் முன்னேறினாலும், கடந்த சில மாதங்களாக பன்னாட்டுப் போர் சூழல் காரணமாக எரி பொருள் விலை உயர்வு மற்றும் தேர்தல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றதால் தொழிலாளர் பற்றாக் குறை ஏற்பட்டது. தற்போது தொழிலாளர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுபட்ட வேகத்தை ஈடுகட்டி செப்டம் பருக்குள் பாலத்தை திறக்க முடியும்.

இந்த மேம்பாலம் இந்தியாவி லேயே மிக அரிய மற்றும் சவாலான பொறியியல் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலின் இரட்டை சுரங்கப் பாதைகளுக்கு நேர் மேலே இந்த மேம்பாலம் அமையவிருப்பதே இதன் மிக முக்கிய அம்சம். சுரங்கப் பாதைகளுக்கு மேல் அமையவுள்ள 32 டெக்குகளில் இது வரை 13 டெக்குகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு டெக் ஸ்லாபும் 30 மீட்டர் நீளம் கொண்டது.

சைதாப்பேட்டை பகுதியில் ஏறுதளப் பாதை மற்றும் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்புச் சுவர்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயண நேரம் குறையும்!

மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்றாலும், கட்டுமானப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக நிழற் குடைகள் அமைக்க வேண்டும். சில இடங்களில் மேலிருந்து தண்ணீர் கொட்டுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயணிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றசாட்டு தெரிவிக்கின்றனர்.

இந்த மேம்பாலம் நிறைவடைந்த வுடன் சென்னையின் மய்யப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைத்து, மக்களின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *