நுரையீரலைப் பாதுகாப்போம்!

1 Min Read

கரோனாவுக்கு பிறகு, ஏராளமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுரையீரலை பத்திரமாக பாதுகாக்க என்ன செய்வது? என்பதற்கான முக்கிய அறிவுரைகள்.

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

சளி, இருமலுடன் காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்படலாம். இருதய கோளாறு, குருதிச் சோகை உள்ளவர்களுக்கும், மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூச்சிரைப்பு அதிகமாக இருத்தல், ஸ்டீராய்டு மருந்துகள் நீண்ட காலமாக எடுத்துக் கொண்டிருப் பவர்கள், சளியுடன் குருதி, உடல் எடை குறைதல் ஆகியவை, நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்.

மூச்சுப் பயிற்சி, நுரையீரலை
பாதுகாக்க உதவுமா!

கண்டிப்பாக உதவும். புகைபிடிப்பதை கைவிட்டவர்கள், டி.பி., கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள், சாதாரண நபர்களும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதனால் நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை, நிலையானதாக இருக்கும். நுரையீரலை பாதுகாக்க உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, நடை பயிற்சி அவசியம்.

புகைப்பிடித்தல் தவிர, இதர காரணங்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுமா?

சுற்றுச்சூழல் மாசுபட்டிருந்தால் நமது வாய், மூச்சு வழியாக கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படலாம். அந்தந்த தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு, அதில் ஏற்படும் மாசுவால், நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நுரையீரல் பாதிப்புக்கும்,
இருதயத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

நீண்ட காலம் நுரையீரல் பாதிப்பு இருந்தால், பிற உறுப்புகளுக்கு ஆக்சிஜன் எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஆரோக்கியமான நுரையீரலுக்கான அளவுகோல் என்ன?

இது மனிதர்களுக்கு மனிதர், உடல் எடை, உயரம், எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு ஏற்ப மாறுபடும். நுரையீரல் திறன் பரிசோதனை வாயிலாக, இதை அறியலாம். தோராயமாக, 30 நொடி முதல் ஒரு நிமிடம் வரை, மூச்சை அடக்கும் திறன் பெற்று இருந்தால், ஓரளவு ஆரோக்கியமான நுரையீரலை கொண்டுள்ளார் என அறியலாம். துல்லியமாக அறிய சிறந்த பரிசோதனைகள் அவசியம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *