எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வு: மூடும் நிலைக்குத் தள்ளப்படும் உணவகங்கள்

1 Min Read

சென்னை, மே 25 தமிழ்நாடு முழு வதும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரி வாயு உருளைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்து, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்குள், 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளையின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.1,000 வரை உயர்ந்து, தற்போது ரூ.3,450-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, போதிய அளவு எரிவாயு உருளைகள் சந்தையில் கிடைக்காததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்கள் வேறு வழியின்றி, வெளிச்சந்தையில் கூடுதல் பணம் கொடுத்து எரிவாயு உருளைகளை  வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக தேநீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர். எரிவாயு உருளைகள் கிடைக்காததால் மின்சார அடுப்பு களைப் பயன்படுத்தும் கடைகளில் மின்கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், வேறு வழியின்றி பல சிறு வணிகர்கள் மீண்டும் பழையபடி விறகு அடுப்பு களைப் பயன்படுத்தும் நிலைக்குப் பின்னோக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கவலை தெரி வித்துள்ள தேநீர் கடை உரிமை யாளர்கள், ‘‘எங்களின் அன்றாட வாழ்வாதாரமே இந்த எரிவாயு உருளைகளை நம்பித்தான் உள்ளது. இந்தக் கடுமையான தட்டுப்பாட்டுச் சூழலில், அரசு உடனடியாக தலையிட்டு எங்க ளுக்குத் தட்டுப்பாடின்றியும், நியா யமான விலையிலும் எரிவாயு உருளைகள்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால், ஆயிரக்கணக்கான சிறு கடைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *