கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.5.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*சி.பி.எஸ்.இயின் மும்மொழி கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு: அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*பெற்றோர் அய்ஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? – உச்ச நீதிமன்றம் கேள்வி

* அமெரிக்க தேசிய உளவுத்துறை பணிப்பாளர் துளசி கப்பார்ட் பதவி விலகினார்..! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை பணிப்பாளராக (DIRECTOR OF NATIONAL INTELLIGENCE – DNI) பணியாற்றி வந்த துளசி கப்பார்ட் (TULSI GABBARD) தனது பதவியிலிருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீட்-யுஜி வினாத்தாள் கசிவு சர்ச்சை: புனேவில் இருந்து மூன்றாவது ஆசிரியை சிபிஅய் கைது; நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் இயற்பியல் வினாத்தாளை கசிய விட்ட புனே பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தார் நேற்று (22.5.2026) கைது செய்யப்பட்டார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத்தில் மது, சூதாட்ட கும்பல் இருப்பதாக பாஜக எம்.பி. மன்சுக் வாசவா குற்றச்சாட்டு: குஜராத்தில் உள்ள ஒரு பெரிய சட்டவிரோத மதுபான வலையமைப்பு, காவல்துறை மற்றும் அரசியல் சக்திகளின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது என்று பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தி இந்து:

* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை மூடி மறைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு; இத்தகைய “பேரழிவிற்கும்” அதனைத் தொடர்ந்து “நடைபெற்று வரும் மூடிமறைப்பு முயற்சிகளுக்கும்” பிரதமரும், கல்வி அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் (தொடர்பாடல்) ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

தி டெலிகிராப்:

*கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (‘COCKROACH JANTA PARTY’) நிறுவனரின் பெற்றோர்கள் நிம்மதி இழப்பு: கேலிச்சித்திர பாணியிலான சமூக ஊடகத் தளமான ‘COCKROACH JANTA PARTY’ (CJP), தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இணையத்தில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை ஈட்டிப் பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், அதன் நிறுவனரான அபிஜித் திப்கேவின் பாதுகாப்பு மற்றும் அவருக்கு ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கள் குறித்து அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *