பற்களை மீண்டும் இயற்கையாகவே முளைக்கச் செய்யும் மருந்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தொடக்கம்!

1 Min Read

டோக்கியோ, மே 24- விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாக முளைக்க வைக்கும் ‘TRG-035’ மருந்து- ஜப்பானில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது. பற்கள் விழுந்த இடத்தில் செயற்கை பற்கள் மற்றும் இம்ப்ளான்ட் (Implants) சிகிச்சைகளுக்கு மாற்றாக, பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச் செய்யும் ‘TRG-035’ என்ற புதிய மருந்தின் உலகின் முதலாவது மனித மருத்துவப் பரிசோதனையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.

கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவமனையில் துவங்கியுள்ள இந்த தீவிரப் பரிசோதனை வெற்றிகரமாக முடிகின்ற பட்சத்தில், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த மருந்து உலக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனப் பல் மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *